அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை
தமிழகத்தில் காலை 10 மணி வரை அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாமக்கல்லில் தொடர் மலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தொடர் மழையால் மக்களின் அன்றாட வழக்கை பாதிக்கப்பட்டது.
