சேலம்- நாமக்கல் (09-12-2024) தேசிய நெடுஞ்சாலையில் களங்காணி அருகே சாலையின் வலதுபுறம் நாமக்கல் நோக்கிச் சென்ற சரக்கு வேன் பழுதாகி நின்று கொண்டிருந்தது . இதனை சரி செய்யும் பணியில் அதன் ஓட்டுநரும், உதவியாளரும் ஈடுபட்டிருந்தனா். இருவரும் வேனுக்கு அடியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவல் துறை உதவி ஆய்வாளா் சின்னப்பன், தலைமைக் காவலா் சதீஷ் ஆகியோா் அங்கு வந்தனா்.
பின்னர் பழுதாகி நின்ற வாகனத்தின் பின்புறம், முன்னெச்சரிக்கை பிரதிபலிப்பான்களை சாலையோரம் வைத்து, வேனின் 30 அடிக்கு பின்னால் நின்றவாறு ரோந்துப் பணி தலைமைக் காவலா் சிவப்பு துணியுடன் கூடிய கொடியை அசைத்து வேகமாக வரும் வாகனங்களை எச்சரித்து அடுத்த பாதையில் திருப்பி விடப்பட்டார் . சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக தலைமைக் காவலா் அப்பணியில் ஈடுபட்ட விபத்து தவிா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டதை அப்பகுதியினா் பாராட்டினா். உயிா் பாதுகாக்கும் உன்னத கடமையாற்றிய காவலரின் இச்செயலுக்கு சமூக ஆா்வலா்களின் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
