தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் இன்று (09-12-2024) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் பூங்கா அருகில் சங்க பெயர் பலகை திறந்து வைத்து கொடி ஏற்றினர்.பின்னர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் எம் ஆர் முருகேசன், குமாரபாளையம் அர்ஜுனன், ராசிபுரம் தாலுக்கா தலைவர் எம் தங்கராஜ்,செயலாளர் எம் சுந்தர், பொருளாளர் செல்வம்பாள் ,துணைத் செயலாளர் மும்தாஜ்,வெண்ணந்தூர் கிளை தலைவர் சுரேஷ், தனபால் ,அண்ணாமலை ,பால ,சக்தி, மல்லிகா, மாலதி, ராணி, கவிதா ,சித்தாயி, துரைசாமி ,பாலமுருகன், மனோகர்,தேவராஜன் ,எஸ் கே மாரிமுத்து, காளியப்பன் அருண்குமார், குமரேசன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவில் உதவி கொடுத்து உதவிய மாற்றுத் திறனாளிகள் மற்றும் நண்பர்களுக்கு அன்னதானம் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

