மணிப்பூரில் நிலவும் வன்முறையை தடுக்க தவறிய, மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் சார்பாக நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்கள்.கடந்த 2023 மே மாதம் முதல் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடா்ந்து இனக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது எனவும் , பழங்குடியின மக்கள், காவலா்கள் என பலரும் உயிரிழந்து வருகின்றனா் எனவும் இப்போராட்டமானது நடைபெற்றது.
தற்போது வரையில் கலவரம் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசு உரிய முயற்சி எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.அந்த வகையில், மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் , நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை (10-12-2024 ) கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமா் மோடியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டனர்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். நாமக்கல் மாநகரத் தலைவா் எஸ்.ஆா்.மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா் வி.பி. வீரப்பன், ராசிபுரம் நகரத் தலைவா் முரளி, முன்னாள் மாணவா் தலைவா் பாலாஜி, வட்டார தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
